பங்குனி உத்திரத்தையொட்டி கோவிலில் சிறப்பு பூஜை
பங்குனி உத்திரத்தையொட்டி கம்பம் வேணுகோபால கிருஷ்ணன் கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் அலங்காரம் நடந்தது.
கம்பம்:
பங்குனி உத்திரத்தையொட்டி நேற்று, தேனி மாவட்டத்தில் பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடைபெற்றது.
இதில் கம்பத்தில் வேணுகோபால கிருஷ்ணன் கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றன.
இதை தொடர்ந்து யது குல வள்ளி தாயார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.