தர்மபுரி அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை

தர்மபுரி அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-03-27 22:45 GMT
தர்மபுரி,

தர்மபுரி அருகே உள்ள ஏரிக்கோடி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருடைய மனைவி ரேவதி (வயது 27). ரேவதிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்று வந்தார். சம்பவத்தன்று ரேவதி விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். ரேவதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்