கோபி பகுதியில் முக கவசம் அணியாத 12 பேருக்கு ரூ.2,400 அபராதம்

கோபி பகுதியில் முக கவசம் அணியாத 12 பேருக்கு மொத்தம் ரூ.2 ஆயிரத்து 400 அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2021-03-27 22:42 GMT
கோபி
கோபி நகராட்சி துப்புரவு அலுவலர் சோலைராஜ், துப்புரவு ஆய்வாளர்கள் செந்தில்குமார், கார்த்திக், தூய்மை திட்ட மேற்பார்வையாளர்கள், பரப்புரையாளர்கள் ஆகியோரை கொண்ட அதிகாரிகள் குழுவினர் கோபியில் பல்வேறு பகுதிகளில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என ஆய்வு மேற்கொண்டனர். அப்போது முக கவசம் அணியாத 12 பேருக்கு தலா ரூ.200 என மொத்தம் ரூ.2 ஆயிரத்து 400 அபராதம் விதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்