தர்காவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பிரார்த்தனை
தர்காவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பிரார்த்தனை செய்தார்.
அமைச்சர் வாக்கு சேகரிப்பு
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் குனியமுத்தூர், கோவைப்புதூர் உள்பட தொகுதி முழுவதும் வீதி, வீதியாக சென்று தீவிர ஓட்டு சேகரித்து வருகிறார். இந்த நிலையில் குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அங்குள்ள தர்காவுக்கு சென்ற எஸ்.பி.வேலுமணி மலர்தூவி சிறப்பு பிரார்த்தனை செயதார். தர்கா தலைவர் சையத் தாக்முல் உசேன், முத்தவல்லி ஷானாவாஸ், செயலாளர் உசேன், பகுதி செயலாளர் மதன கோபால் உள்பட பலரும் கலந்துகொண்டனர்.
சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு
பின்னர் அந்த பகுதியில் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்ட அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசும் போது, முஸ்லிம்களின் நலனுக்காக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சுகுணாபுரம் பகுதியில் கபர்ஸ்தானுக்கு நிலம் கையகப்படுத்திக் கொடுக்கப்பட்டு உள்ளது. முஸ்லிம்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு உள்ளது. சிறுபான்மை மக்களுக்கு நாங்கள் பாதுகாப்பு அரணாக இருப்போம்" என்று கூறினார்.