ஈரோடு மாவட்டத்தில் வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கான 2-ம் கட்ட பயிற்சி
ஈரோடு மாவட்டத்தில் வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கான 2-ம் கட்ட பயிற்சி நடந்தது.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கான 2-ம் கட்ட பயிற்சி நடந்தது.
2-ம் கட்ட பயிற்சி
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் 2 ஆயிரத்து 741 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அங்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என மொத்தம் 13 ஆயிரத்து 160 பேர் ஈடுபட உள்ளார்கள். இவர்களுக்கு தேர்தல் நடத்துவது தொடர்பான பயிற்சி மொத்தம் 3 கட்டமாக நடத்தப்பட்டு வருகிறது. இதில் முதல் கட்ட பயிற்சி கடந்த வாரம் நடந்தது.
இந்தநிலையில் 2-வது கட்ட பயிற்சி ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நேற்று நடத்தப்பட்டன. இதில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான பயிற்சி ஈரோடு ரங்கம்பாளையம் ஆர்.ஏ.என்.எம். கலை அறிவியல் கல்லூரியிலும், ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதிக்கான பயிற்சி கொங்கு கல்வி நிலையம் பள்ளிக்கூடத்திலும் நடந்தது.
செயல் விளக்கம்
இந்த பயிற்சியில் வாக்குச்சாவடி அதிகாரிகள் கலந்துகொண்டார்கள். அவர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பயன்படுத்துவது குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. அப்போது வாக்குப்பதிவு எந்திரத்துடன் கட்டுப்பாட்டு கருவியையும், வி.வி.பேட் கருவியையும் இணைப்பது, வாக்குகளின் எண்ணிக்கையை கண்காணிப்பது போன்றன குறித்து அதிகாரிகள் விளக்கினார்கள்.
மேலும், வாக்காளர்களின் விவரங்களை சரிபார்த்தல், ஆவணங்களை சரிபார்த்து வாக்களிக்க அனுமதிப்பது, வாக்காளர்களின் விரலில் மை வைத்தல் போன்ற தேர்தல் நடைமுறைகள் குறித்தும் அதிகாரிகள் விளக்கி பேசினார்கள். மேலும், வாக்குப்பதிவு எந்திரத்தில் பழுது ஏற்பட்டால், அதனை சரி செய்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. ஓட்டுப்பதிவு தொடங்கியதில் இருந்து ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஒருமுறை குறுந்தகவல் மூலமாக தேர்தல் அதிகாரிகளுக்கு தகவலை அனுப்பி வைப்பது பற்றி அறிவுறுத்தப்பட்டது. வாக்குச்சாவடி அதிகாரிகளும் தங்களது சந்தேகங்களை கேட்டு தெளிவுப்படுத்தி கொண்டனர்.