தென்காசியில் வாக்கு எண்ணும் மையத்தை தேர்தல் பார்வையாளர் ஆய்வு
தென்காசியில் வாக்கு எண்ணும் மையத்தை தேர்தல் பார்வையாளர் ஆய்வு செய்தார்.
தென்காசி, மார்ச்:
தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளான சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், கடையநல்லூர், தென்காசி, ஆலங்குளம் ஆகிய தொகுதிகளுக்கு கொடிக்குறிச்சி பகுதியில் உள்ள யூ.எஸ்.பி.கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. எனவே அங்கு வாக்கு பெட்டிகளை வைக்கும் அறை, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடம் மற்றும் பல்வேறு கட்ட முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றை தேர்தல் பார்வையாளர் ராஜூ நாராயணசாமி, மாவட்ட கலெக்டர் சமீரன் ஆகியோர் பார்வையிட்டனர். பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜனனி சவுந்தர்யா, தென்காசி போலீஸ் துணை சூப்பிரண்டு கோகுல கிருஷ்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.