நெல்லையப்பர் கோவிலில் செங்கோல் வழங்கும் நிகழ்ச்சி

பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு நெல்லையப்பர் கோவிலில் செங்கோல் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2021-03-27 20:31 GMT
நெல்லை, மார்ச்:
நெல்லையப்பர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தன. கடந்த 21-ந்தேதி கோவிலில் வேணு வனத்தில் சுவாமி தோன்றிய வைபவ நிகழ்ச்சி நடந்தது.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக செங்கோல் வழங்கும் விழா நேற்று இரவு 7 மணி முதல் 8 மணி வரை நடந்தது. இந்த நிகழ்ச்சி ஆயிரங்கால் மண்டபத்தில் நடத்தப்பட்டது. நெல்லைப்ப்பர் கோவில் செயல் அலுவலர் ராமராஜா வுக்கு செங்கோல் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு காலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜை வழிபாடு நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை நெல்லையப்பர் கோவில் நிர்வாகம் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்