சரக்கு வாகனங்களில் பயணிகளை ஏற்றிச்சென்ற டிரைவர்கள் மீது வழக்கு

சரக்கு வாகனங்களில் பயணிகளை ஏற்றிச்சென்ற டிரைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2021-03-27 20:26 GMT
அரியலூர்:
தமிழத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் பிரசாரத்திற்கு சரக்கு வாகனங்களில் பயணிகளை ஏற்றிச்செல்லக்கூடாது என்று தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார். மேலும் வாகனங்களில் பயணிகளை ஏற்றிச்சென்றால் அவர்களுடைய ஓட்டுனர் உரிமம், வாகன உரிமம் ஆகியவை ரத்து செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரியலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் பிரபாகரன் தலைமையில் கீழப்பழுவூர், அரியலூர், வி.கைகாட்டி ஆகிய பகுதிகளில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் வாகன சோதனை நடத்தப்பட்டது. அப்போது சரக்கு வாகனங்களில் பயணிகளை ஏற்றி வந்த டிரைவர்களுக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் அறிவுரை வழங்கினார். மேலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தார். சரக்கு வாகனங்களில் பயணிகளை ஏற்றிச்செல்ல மாட்டோம் என்ற வில்லைகளையும் வாகனத்தில் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மேலும் செய்திகள்