‘என் வாக்கு விற்பனைக்கு அல்ல’ வீடுதோறும் ஒட்டப்பட்ட சுவரொட்டி
மருதிபட்டியில் ‘என் வாக்கு விற்பனைக்கு அல்ல’ வீடுதோறும் சுவரொட்டி ஒட்டப்பட்டது.
சிங்கம்புணரி,
இந்த சுவரொட்டி மருதிபட்டி இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் அரளிபட்டி இளைஞர்கள் நற்பணி மன்றம் சார்பில் அனைத்து வீடுகளிலும் ஒட்டப்பட்டு உள்ளது. இது குறித்து அப்பகுதியை சேர்ந்த சம்சுதீன் கூறும் போது, சட்டசபை தேர்தலில் வாக்களிப்பது நமது கடமை. ஆதலால் வேட்பாளர்கள் கொடுக்கும் பணத்துக்காக எங்கள் ஓட்டை நாங்கள் விற்க மாட்டோம். நல்ல திட்டங்களை செயல்படுத்தும் வேட்பாளர்களுக்கு ஓட்டு போடுவோம். எங்கள் கிராம மக்கள் இதில் விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள் என்றார். ஓட்டுக்கு பணம் பெறுவதை அந்த கிராம பெண்களும் விரும்புவதில்லை. அவர்களும் கூறும் போது, ஜனநாயக முறைப்படி நல்ல வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம். ஆதலால் எனது வாக்கை நாங்கள் விற்க மாட்டோம் என்றனர்.