கருப்பத்தூர் சிம்மபுரீஸ்வரர் கோவில் தேரோட்டம்

லாலாபேட்டை அருகே உள்ள கருப்பத்தூர் சிம்மபுரீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Update: 2021-03-27 19:26 GMT
லாலாபேட்டை
தேரோட்டம்
கரூர் மாவட்டம், லாலாபேட்டை அருகே கருப்பத்தூர் காவிரி தென்கரை ஓரத்தில் பிரசித்தி பெற்ற சுகுந்தளாம்பிகை சமேத ஸ்ரீ சிம்மபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தேரோட்டம் வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்தாண்டு தேரோட்டம் நேற்று காலை நடந்தது. இதையொட்டி அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேரில் முதலில் சுவாமியை எழுத்தருள செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக ஆடி, அசைந்து 4 ரத வீதிகளிலும் வலம் வந்தது. அப்போது ஒவ்வொரு வீதியிலும் கூடிநின்ற பக்தர்கள் சுவாமிக்கு தேங்காய், பழம் வைத்து அர்ச்சனை செய்து வழிப்பட்டனர்.
திரளான பக்தர்கள்
பின்னர் தேர்அதன் நிலையை வந்தடைந்தது. அப்போது மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் லாலாபேட்டை, கருப்பத்தூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தேரோட்டத்தையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை லாலாபேட்டை போலீசார் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்