மேல்மலையனூர் அருகே ரூ. 4 லட்சம் பட்டாசுகள் பறிமுதல் பறக்கும் படையினர் நடவடிக்கை

மேல்மலையனூர் அருகே ரூ. 4 லட்சம் பட்டாசுகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனா்.

Update: 2021-03-27 17:44 GMT
மேல்மலையனூர், 

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே வளத்தியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் தண்டபாணி தலைமையில் போலீசார் முனுசாமி, அறிவழகன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக செஞ்சியில் இருந்து சேத்துப்பட்டு நோக்கி சென்ற லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் உரிய ஆவணமின்றி ரூ. 4 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் எடுத்து செல்வது தெரியவந்தது.

விசாரணையில், லாரியில் வந்தவர்கள் விருதுநகர் மாவட்டம் சிவாகாசி பாரத ஸ்டேட் வங்கி காலனியை சேர்ந்த பொன்னுசாமி மகன் ஜெய்கணேஷ்பிரபு (வயது 44) என்பது தெரியவந்தது. மேலும் அவர் 35  பெட்டிகளில் பட்டாசுகளை எடுத்து வந்தது தெரியவந்தது. 

இதற்கிடையே பாதுகாப்பற்ற முறையில் அதிகளவில் பட்டாசு எடுத்து சென்றதாக கூறி, போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெய்கணேஷ் பிரபுவை கைது செய்தனர். மேலும் 35 பட்டாசு பெட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்