மும்மத ஆலயங்களில் சசிகலா வழிபாடு

நாகை மாவட்டத்தில் உள்ள மும்மத ஆலயங்களில் சசிகலா நேற்று வழிபாடு நடத்தினார். அப்போது தமிழக சட்டசபை தேர்தல் முடிவு எப்படி இருக்கும்? என்று நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு மவுனத்தையே பதிலாக அளித்தார்.

Update: 2021-03-27 17:21 GMT
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்தில் உள்ள மும்மத ஆலயங்களில் சசிகலா நேற்று வழிபாடு நடத்தினார். அப்போது தமிழக சட்டசபை தேர்தல் முடிவு எப்படி இருக்கும்? என்று நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு மவுனத்தையே பதிலாக அளித்தார். 
சசிகலா சாமி தரிசனம்
சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்று விடுதலையான சசிகலா தமிழகம் முழுவதும் பல்வேறு கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார். இந்த நிலையில் நாகை மாவட்டம் நாகூர் நாகநாதர்  கோவிலுக்கு நேற்று மதியம் 3.55 மணியளவில் சசிகலா தனது உறவினர்களுடன் வந்தார். 
பின்னர் கோவிலில் உள்ள ராகு சன்னதியில் தோஷம் நீங்க பூஜை செய்து வழிபட்டார். தொடர்ந்து நடைபெற்ற ஹோம பூஜையில் கலந்து கொண்டார்.
மவுனமே பதில்
பின்னர் சாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்த சசிகலாவிடம், நிருபர்கள், தேர்தல் பிரசாரம் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் நீங்கள் எதற்காக இங்கு வந்து உள்ளீர்கள் என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், அனைவரும் நலமுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சாமி தரிசனம் செய்ய வந்தேன் என்றார். 
தமிழக சட்டசபை தேர்தல் முடிவு எப்படி இருக்கும்? என்று நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, அவர், மவுனமாக காரில் ஏறி சென்று விட்டார்.
வேளாங்கண்ணியில் பிரார்த்தனை
இதையடுத்து சசிகலா வேளாங்கண்ணி மாதா பேராலயத்திற்கு சென்று. அங்கு நடந்த சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொண்டார். தொடர்ந்து நாகூர் ஆண்டவர் தர்காவிற்கு சென்று சிறப்பு துவா வழிபாட்டில் கலந்து கொண்டார். பின்னர் அவர் திருவாரூக்கு புறப்பட்டு சென்றார். 
நாகை மாவட்டத்திற்கு நேற்று திடீரென்று வருகை தந்த சசிகலா, அங்குள்ள மும்மத ஆலயங்களில் வழிபாடு செய்து விட்டு ெசன்றது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்