பெரும்பாறை அருகே வனப்பகுதியில் காட்டுத்தீ

பெரும்பாறை அருகே வனப்பகுதியில் காட்டுத்தீ பற்றி எரிந்தது.

Update: 2021-03-27 16:34 GMT
பெரும்பாறை :
பெரும்பாறை அருகே ஓவாமலை, பிளாத்தி பள்ளம் என்ற வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் நேற்று மாலை திடீரென காட்டுத்தீ கட்டுக்கு அடங்காத வகையில் செடி, கொடி, மரங்களில் பற்றி எரிய தொடங்கியது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் வத்தலக்குண்டு வனச்சரகர் ஆறுமுகம் தலைமையில் வன காப்பாளர் பீட்டர் மற்றும் தீத்தடுப்பு பணியாளர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த காட்டுத்தீயால் ஏராளமான மரங்கள் எரிந்து நாசமானது. மேலும் தீயின் தாக்கத்ைத தாங்க முடியாமல் காட்டெருமை, காட்டுப்பன்றி, மான்கள் உள்ளிட்ட வன விலங்குகள் அங்கிருந்து வேறு பகுதிக்கு தப்பி ஓடின.


மேலும் செய்திகள்