மூட்டு வலியால் அவதியடைந்து வந்ததால் எறும்பு மருந்து தின்று மூதாட்டி தற்கொலை

மூட்டு வலியால் அவதியடைந்து வந்ததால் மனமுடைந்த மூதாட்டி, எறும்பு மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-03-27 16:21 GMT
திருவள்ளூர், 

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் வேப்பஞ்செட்டி கிராமம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ஏகாம்பரம். இவரது மனைவி ராணி (வயது 70). கடந்த சில மாதங்களாக ராணி மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் அவர், நடக்க முடியாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் அவருக்கு மூட்டு வலி அதிகமானதால் மன வேதனை அடைந்தார். பின்பு அவர், வீட்டில் இருந்த எறும்பு மருந்தை (விஷம்) சாப்பிட்டு விட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி் கீழே விழுந்தார்.

இதைக்கண்ட அவரது வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு, சிகிச்சைக்காக திருவள்ளூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனில்லாமல் ராணி பரிதாபமாக இறந்துபோனார்.

இதுகுறித்து கடம்பத்தூர் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் கபிலர் நகரை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (45). வாட்டர் கேன் தொழில் செய்து வந்த இவர், கடந்த 31-ந்தேதி ஏற்பட்ட சாலை விபத்தில் காயம் அடைந்ததில், மன உளைச்சலுக்கு ஆளானதாக தெரிகிறது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் இருந்த கிருஷ்ணகுமார் மின்விசிறியில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மணவாள நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்