புள்ளம்பாடி வடக்கு ஒன்றியத்தில் அ.தி.மு.க. கூட்டணி கட்சி த.மா.கா. வேட்பாளர் தர்மராஜ் தீவிர வாக்கு சேகரிப்பு

திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. கூட்டணி கட்சியின் த.மா.கா. வேட்பாளர் டி.ஆர்.தர்மராஜ் கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Update: 2021-03-27 04:30 GMT
அ.தி.மு.க. கூட்டணி த.மா.கா. வேட்பாளர் தர்மராஜை பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்ற போது
திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. கூட்டணி கட்சியின் த.மா.கா. வேட்பாளர் டி.ஆர்.தர்மராஜ் தெரணிபாளையம், ஊட்டத்தூர், நம்புகுறிச்சி, பெருவளப்பூர், காண கிளியநல்லூர், சிறுவயலூர், சிறுகளப்பூர், நல்லூர், கருடமங்கலம், சரடமங்கலம், அலுந் தலைப்பூர் ஆகிய கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

அப்போது அவர் பேசுகையில், இந்த பகுதி மானாவாரி விவசாய பகுதியாகும். இந்த பகுதியில் பருத்தி, மக்காச்சோளம், வெங்காயம் உள்ளிட்ட பயிர்கள் அதிகமாக விளைவிக்கப்படுகின்றன. பகுதி விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய நிர்ணய விலை பெற்றிட நேரடி கொள்முதல் நிலையங்களும், அதன்மூலம் நிர்ணய விலையில் அரசு பெற்றுக் கொள்ள நான் பாடுபடுவேன் என உறுதியளித்தார். மேலும் பல கிராமங்களில் சமுதாய கூடங்கள், பஸ் நிலையங்கள், அரசு மற்றும் தனியார் பஸ் வசதி உருவாக்கப்படும் என்றார். 

பிரசாரத்தின் போது அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் டி.என்.சிவக்குமார், ராஜாராம், நகர செயலாளர்கள் பிச்சைபிள்ளை, ஜேக்கப்அருள்ராஜ், நிர்வாகிகள் அருணகிரி, செல்வம், தினேஷ் ராஜா, முத்தமிழ்செல்வன், செல்வராஜ், த.மா.கா. விவசாய பிரிவு மாநில துணைத்தலைவர் சங்கேந்தி தியாகராஜன், மாவட்ட துணை தலைவர் ஜெயபிரகாசம், வட்டார தலைவர்கள் செல்வகுமார், 
ராஜமாணிக்கம், மாவட்ட இளைஞரணி செயலாளர் சுகன், மாவட்ட வலைதளபிரிவு தலைவர் பொன்னரசன் உள்பட ஒன்றிய, நகர, கிளை கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். பிரசாரத்தின் போது ஆங்காங்கே பொதுமக்கள் வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்து மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மேலும் செய்திகள்