மக்கள் நலத்தி்ட்டங்கள் தொடர அ.தி.மு.க.வை ஆதரியுங்கள்; திருவிடைமருதூர் அ.தி.மு.க. வேட்பாளர் யூனியன் வீரமணி பேச்சு

மக்கள் நலத்திட்டங்கள் தொடர அ.தி.மு.க.வை ஆதரியுங்கள் என்று திருவிடைமருதூர் அ.தி.மு.க. வேட்பாளர் யூனியன் வீரமணி கூறினார்.

Update: 2021-03-27 02:15 GMT
வாக்குசேகரிப்பு
திருவிடைமருதூர் சட்டசபை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் யூனியன் எஸ். வீரமணி  நேற்று காலை திருப்பனந்தாள் ஒன்றியம் திருவள்ளூரில் இருந்து பிரசாரத்தை தொடங்கினார். முன்னாள் எம்.பி.யும் திருப்பனந்தாள் ஒன்றிய செயலாளருமான ஆர்.கே.பாரதிமோகன் வேட்பாளர் யூனியன் வீரமணிக்கு வாக்கு சேகரித்து பேசினார். நேற்று  திருப்பனந்தாள் ஒன்றியத்தில் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பிரசாரம் செய்தார்.  அப்போது அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கிராமங்களில் பிரசார வேனில் சென்ற வேட்பாளர் யூனியன் எஸ். வீரமணி செல்லும் வழியில் விவசாய வேலைகளில் ஈடுபட்டு உள்ள தொழிலாளர்களை பார்த்து பிரசார வாகனத்தில் இருந்து இறங்கி சென்று நேரில் வாக்கு சேகரித்தார். 

நடவடிக்கை

அப்போது அவர் கூறியதாவது:- 
தமிழகத்தின் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் மக்களாட்சி சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. அ.தி.மு.க. ஆட்சி தமிழகத்தில் தொடர வேண்டும். அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள அனைத்து திட்டங்களும் திருவிடைமருதூர் தொகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவருக்கும் கிடைக்க சோழமண்டல தளபதியும் கழக இணை ஒருங்கிணைப்பாளருமான ஆர். வைத்திலிங்கம் ஆலோசனையோடு முழுமையான அளவில் நடவடிக்கை எடுக்கப்படும்.  மக்கள் நலனுக்காக நடைபெறும் 

அ.தி.மு.க..வின் நல்லாட்சி தொடர வாக்காளர்கள் அனைவரும் அ.தி.மு.க.வுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். வாக்குசேகரிப்பின் போது பா.ம.க. மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் திரளானோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்