எலாஸ்டிக் உற்பத்தியாளர்கள் 2வது நாளாக போராட்டம்
எலாஸ்டிக் உற்பத்தியாளர்கள் 2வது நாளாக போராட்டம் ரூ.8 கோடிக்கு வர்த்தகம் பாதிப்பு
திருப்பூர்
திருப்பூர் மற்றும் சுறறுவட்டார பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட எலாஸ்டிக் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
எலாஸ்டிக் உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களின் விலை சில மாதங்களாக உயர்ந்து வருகிறது. அதன்படி ஒரு கிலோ ரப்பர் ரூ.180-ஆக இருந்தது. ஆனால் தற்போது ரூ.350-ஆக உள்ளது. 100 சதவீதம் விலை உயர்ந்துள்ளது. இதுபோல் லைக்ரா ரூ.400-ல் இருந்து ரூ.750 வரை உயர்ந்துள்ளது. பாலியஸ்டர் நூல் ரூ.80-ல் இருந்து ரூ.125-ஆக உயர்ந்துள்ளது.
இதனால் ரப்பர், நூல், லைக்ரா விலை உயர்வை கண்டித்து திருப்பூர் எலாஸ்டிக் உற்பத்தியாளர்கள் நேற்று முன்தினம் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று 2-வது நாளாக இந்த போராட்டம் நடைபெற்றது. இதன் மூலம் கடந்த 2 நாட்கள் நடந்த போராட்டத்தில் 3 கோடி மீட்டர் எலாஸ்டிக் உற்பத்தி மற்றும் ரூ.8 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக திருப்பூர் எலாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்க தலைவர் கோவிந்தசாமி தெரிவித்தார்.