பால விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

ஆலங்குளம் அருகே பால விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

Update: 2021-03-26 20:26 GMT
ஆலங்குளம், 
ஆலங்குளம் அருகே உள்ள அப்பையநாயக்கர்பட்டியில் பாலவிநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த ேகாவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழா பூஜைகளை மோகன் அய்யர் நடத்தி வைத்தார். அப்பையநாயக்கர் பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் நாட்டாண்மை சிவராமசுப்பு மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். விழாவையொட்டி திருவிளக்கு பூஜை நடந்தது. 

மேலும் செய்திகள்