தூய்மை பணியாளர் திடீர் சாவு

தூய்மை பணியாளர் மயங்கி விழுந்து இறந்தார்.

Update: 2021-03-26 19:31 GMT
அன்னவாசல், மார்ச்.27-
இலுப்பூர் ஜீவா நகரை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 48). இவர் இலுப்பூர் பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளராக வேலை பார்த்துவந்தார்.
இந்த நிலையில் விடுமுறையில் இருந்த அவர் துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது, அவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக இலுப்பூர் அரசு மருத்துவனையில் அனுமதித்தனர்.அங்கு பழனிச்சாமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து இலுப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்