குதிரை வண்டியில் விழிப்புணர்வு பேரணி
குதிரை வண்டியில் விழிப்புணர்வு பேரணி.
கோவை,
தமிழக சட்ட மன்றத்திற்கான வாக்குப்பதிவு வருகிற 6-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் 100 சதவீத வாக்குபதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் மற்றும் தமிழகஅரசு சார்பில் வாக்காளர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கோவையில் மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் குதிரை வண்டி மூலம் விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. மத்திய வட்டார போக்குவரத்து அலுவலர் பாஸ்கர் தொடங்கி வைத்து கூறியதாவது
பொதுமக்கள் 100 சதவீதம் தங்கள் வாக்குகளை நேர்மையாக செலுத்த வகையில் கோவையில் உள்ள 4 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்தோம்.
இதற்காக 3 குதிரை வண்டிகளில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த வாசகங்கள் அடங்கிய பேனர் ஒட்டி பேரணி நடத்தப்பட்டது.
குதிரை வண்டிகள் மூலம் அவினாசி சாலை, திருச்சி சாலை மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணர்வு பிரசாரம் நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.