10 ஆண்டுகளாக திறக்கப்படாத சமத்துவபுரம் தி.மு.க. ஆட்சி வந்தவுடன் திறக்கப்படும்

சிங்கம்புணரியில் 10 ஆண்டுகளாக திறக்கப்படாத சமத்துவபுரம் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் திறக்கப்படும் என்று தேர்தல் பிரசாரத்தின் போது உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

Update: 2021-03-26 18:04 GMT
சிங்கம்புணரி,

சிங்கம்புணரியில் 10 ஆண்டுகளாக திறக்கப்படாத சமத்துவபுரம் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் திறக்கப்படும் என்று தேர்தல் பிரசாரத்தின் போது உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்

சிங்கம்புணரி பஸ் நிலையம் முன்பு தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் பெரியகருப்பனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:- அ.தி.மு.க.வில் ஜெயலலிதா இருந்தவரை பா.ஜ.க.விடம் கூட்டணி வைக்க மாட்டோம் என கூறி மோடியா லேடியா என கேட்டார். அவர் மறைந்த பின்பு அ.தி.மு.க. அமைச்சர் மோடி எங்க டாடி அவர் பேச்சைக் கேட்போம் என பேசி வருகிறார். அ.தி.மு.க.விற்கு ஓட்டு போட்டாலும் அது பா.ஜ.க.விற்கு போடப்படும் ஓட்டு. அ.தி.மு.க., பா.ஜ.க.வின் கிளைக்கழகம். தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் திருப்பத்தூரில் பாதாள சாக்கடை அமைக்கும் திட்டம், சிங்கம்புணரியில் கட்டி 10 ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ள சமத்துவபுரம் திறக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் மேம்படுத்தப்படும். எனவே உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து தி.மு.க. வேட்பாளர் பெரியகருப்பனை வெற்றி பெற செய்யுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
பிரசாரத்தின் போது தி.மு.க. வேட்பாளர் பெரியகருப்பன் உடன் இருந்தார்.

கலந்து கொண்டவர்கள்

இதில் சிங்கம்புணரி ஒன்றிய செயலாளர் பூமிநாதன், நகர செயலாளர் யாகூப், பொதுக்குழு உறுப்பினர்கள் அம்பள முத்து, சோமசுந்தரம் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டனா். இதனைத்தொடர்ந்து திருப்பத்தூர் தொகுதிக்கு உட்பட்ட தி.மு.க வேட்பாளர் கே.ஆர். பெரியகருப்பன் எம்.எல்.ஏ. வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட கீரணிப்பட்டி திருக்கோளக்குடி பூலாங்குறிச்சி உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.இந்நிகழ்ச்சியின் போது ஒன்றிய செயலாளர் விராமதி மாணிக்கம், பொறுப்பாளர் நாதன், ஒன்றிய துணை செயலாளர் நெடுமரம் எம்.ஆர்.சி. இளங்கோவன் உள்ளிட்ட நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், கலந்து கொண்டனர்.

திருப்புவனம்

மானாமதுரை தனி சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் தமிழரசியை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் திருப்புவனத்தில் தேர்தல் பிரசாரம் செய்தார்.
இதில் தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறன், ஒன்றிய செயலாளர்கள் வசந்தி சேங்கைமாறன், கடம்பசாமி மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்