தேர்தல் அலுவலர்களுக்கு 2-ம் கட்ட பயிற்சி

காரைக்குடியில் தேர்தல் அலுவலர்களுக்கு 2-ம் கட்ட பயிற்சி வழங்கப்பட்டது.

Update: 2021-03-26 17:56 GMT
காரைக்குடி,

காரைக்குடி ராமநாதன் செட்டியார் மேல்நிலைப்பள்ளியில் தேர்தல் பணியாளர்களுக்கான 2-ம் கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சி வகுப்பை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான மதுசூதன்ரெட்டி, தேர்தல் பார்வையாளர் (பொது) எச்.எஸ்.சோனாவனே ஆகியோர் பார்வையிட்டனர்.
பயிற்சியில் உள்ள தேர்தல் அலுவலர்களிடம் வாக்குப்பதிவு அன்று மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பயிற்சியாளர்களிடம் நன்றாக தெரிந்து கொள்வதுடன், மேலும் சந்தேகங்கள் இருந்தால் முழுமையாக கேட்டறிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் நல்ல பயிற்சியுடன் சென்றால் தான் வாக்குப்பதிவு அன்று எவ்வித தாமதமும் இல்லாமல் பணிகள் முடிக்க ஏதுவாக இருக்கும் என அறிவுறுத்தினர். இதில் காரைக்குடி சட்டமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர் சுரேந்திரன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அந்தோணி மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்