சூளகிரியில் முனீஸ்வரர் கோவிலில் பல்லக்கு உற்சவ விழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
சூளகிரியில் முனீஸ்வரர் கோவிலில் பல்லக்கு உற்சவ விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில், பேரிகை சாலையில் ரணமந்த குட்டை ஸ்ரீ முனீஸ்வர சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் 17-ம் ஆண்டு பல்லக்கு உற்சவ விழா 2 நாட்கள் நடைபெற்றது. விழாவையொட்டி, சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து, கனி அலங்காரம் உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில், சாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, வாணவேடிக்கைகளுடன் பல்லக்கு உற்சவம் நடைபெற்றது. மேலும் விழாவையொட்டி பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இதில், சூளகிரி மற்றும் சற்று வட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.