விளவங்கோடு தொகுதியில் அனைத்து பஞ்சாயத்துகளிலும் இலவச மருத்துவ முகாம் நடத்துவேன் சாமுவேல் ஜார்ஜ் பிரசாரம்

விளவங்கோடு தொகுதியில் அனைத்து பஞ்சாயத்துகளிலும் இலவச மருத்துவ முகாம் நடத்துவேன் என்று சுயேச்சை வேட்பாளர் சாமுவேல் ஜார்ஜ் கூறினார்.

Update: 2021-03-27 06:30 GMT
களியக்காவிளை, 

விளவங்கோடு சட்டசபை தொகுதி சுயேச்சை வேட்பாளராக டாக்டர் சாமுவேல் ஜார்ஜ் போட்டியிடுகிறார். அவர் நேற்று குழித்துறை, கல்லுதொட்டி, திருத்துவபுரம், படந்தாலுமூடு, களியக்காவிளை போன்ற பகுதிகளில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஒகி புயலின் போதும், கொரோனா தோற்று ஊரடங்கின் போதும் சாதி, மத பேதமின்றி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினேன். அனைத்து நல்லுள்ளம் கொண்ட வாக்காளர்கள் எனக்கு கிரிக்கெட் மட்டை சின்னத்தில் வாக்களிப்பீர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, நான் சட்டமன்ற உறுப்பினராக ஆனவுடன் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பஞ்சாயத்துகளிலும் மாதம் ஒரு முறை இலவச மருத்துவ முகாம் நடத்துவது என முடிவு செய்து உள்ளேன். 

அரசு ரப்பர் தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான சம்பள உயர்வு மற்றும் சலுகைகள் அனைத்தும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.  இவ்வாறு அவர் கூறினார்.  களியக்காவிளை பகுதியில் உள்ள முந்திரி ஆலையில் தனது ஆதரவாளர்களுடன் சென்று ஆதரவு திரட்டினார்.

மேலும் செய்திகள்