மாற்றுத்திறனாளி தற்கொலை
ராமநாதபுரம் அருகே மாற்றுத்திறனாளி தற்கொலை செய்துகொண்டார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் அருகே உள்ள பேரையூர் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது52). மாற்றுத்திறனாளியான இவர் மனம் உடைந்து வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து அவரின் மகள் வினோதினி ராமநாதபுரம் கேணிக்கரை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.