கராத்தே போட்டியில் மாணவர்கள் சாதனை

கராத்தே போட்டியில் மாணவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.

Update: 2021-03-26 14:36 GMT
கோவில்பட்டி:
மதுரை பாத்திமா கல்லூரியில் மாநில அளவிலான கராத்தே போட்டி நடந்தது. இதில் கோவில்பட்டி கவுணியன் மெட்ரிக் பள்ளி மாணவி சக்தி யோகினி 10 வயது பிரிவில் முதல் பரிசும், லட்சுமி மில் பிரைமரி பள்ளி மாணவன் கிஷோர் சந்தோஷ் 7 வயது பிரிவில் முதல் பரிசும் பெற்றனர்.
சாதனை படைத்த மாணவர்களை மாவட்ட கராத்தே கழக தலைவர் செந்தில், செயலாளர் முத்துராஜா மற்றும் பள்ளி நிர்வாகத்தினர்  பாராட்டினர்.
மேலும், இந்த போட்டியில் தூத்துக்குடி முத்தையாபுரம் ஸ்பிக் நகர், கோல்டன் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு கட்டா பிரிவில் 4 பேர் முதல் பரிசும், 3 பேர் இரண்டாவது பரிசும், 5 பேர் மூன்றாவது பரிசும், சண்டை பிரிவில் 3 பேர் இரண்டாவது பரிசும், 2 பேர் மூன்றாவது பரிசும் வென்றனர்.
சாதனை படைத்த மாணவர்களை கராத்தே கழக மாவட்ட செயலாளர் சென்சாய் முத்துராஜா, வக்கீல் மோகன்தாஸ் சாமுவேல் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னராஜ், முன்னாள் மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி வசந்தராஜன், வக்கீல் முருகன் மற்றும் பலர் பாராட்டினர்.

மேலும் செய்திகள்