ரவுடிகள், குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை போலீஸ் கண்காணிப்பு
ரவுடிகள், குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
பேரையூர்,மார்ச்
சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பாகவும், அமைதியான முறையிலும் நடைபெறுவதற்கு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் பேரையூர் போலீஸ் உட்கோட்டத்தில் உள்ள டி.கல்லுப்பட்டி, சத்திரப்பட்டி, வில்லூர், நாகையாபுரம், பேரையூர், சாப்டூர், சேடப்பட்டி, ஆகிய போலீஸ் நிலைய பகுதியில் உள்ள ரவுடிகள், அடிக்கடி குற்றச் செயல்களில் ஈடுபடுவோர், மதுவிலக்குப் குற்றச் செயல் புரிபவர்கள் போலீசாரால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இவ்வாறு பேரையூர் போலீஸ் உட் கோட்டத்தில் உள்ள 48 ரவுடிகள் உள்பட 78 பேர் கண்காணிக்கப்பட்டு வருவதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.