பாபநாசம் அருகே குடிகாடு ராமநல்லூரில் பாலம் கட்டி முடிக்கப்படும்; மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் உறுதி
பாபநாசம் அருகே குடிகாடு ராமநல்லூரில் பாலம் கட்டி முடிக்கப்படும் என்று மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் ஜவாஹிருல்லா கூறினார்.
வாக்கு சேகரிப்பு
பாபநாசம் தொகுதி தி.மு.க. கூட்டணி மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் ஜவாஹிருல்லா கபிஸ்தலம் அருகே உள்ள மேலகபிஸ்தலம், உம்ளாப்பாடி, சத்தியமங்கலம், வாழ்க்கை, திருவைக்காவூர், தேவனோடை, கொந்தகை, ஓலைப்பாடி, மருத்துவக்குடி, ஆதனூர், துரும்பூர், பட்டவர்த்தி, அனுமாநல்லூர் உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பாலம்
கபிஸ்தலம் பகுதியில் வாக்கு சேகரிப்பின் போது அவர் குடிகாடு- ராமநல்லூர் பாலம் கட்டி முடிக்கப்படும் என்றும் பாபநாசத்தை சுற்றி உள்ள கிராமங்களை இணைக்கும் வகையில் மினி பஸ் வசதிகள் செய்து தரப்படும் என வாக்குறுதி அளித்தார். பாபநாசம் தொகுதியில் நிறைவேற்றப்படாமல் உள்ள திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றுவேன். குறிப்பாக விவசாயிகள் வாழ்வதாரம் மேம்பட உழைப்பேன். மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், சாைலவசதி, தெருவிளக்கு வசதி போன்றவற்றை பாபநாசம் தொகுதி முழுவதும் செய்து தருவேன். பாபநாசம் தொகுதிக்கு உட்பட்ட மக்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகள் குறித்து எந்த நேரத்திலும் என்னை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
வாக்கு சேகரிப்பின் போது தி.மு.க.வின் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம், காங்கிரஸ் தஞ்சை மாவட்ட தலைவர் டி. ஆர். லோகநாதன், தி.மு.க. ஒன்றிய பொறுப்பாளர் தாமரைச்செல்வன், பாபநாசம் ஒன்றியக்குழு தலைவர் சுமதி கண்ணதாசன் மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.