உங்கள் வீட்டுப் பிள்ளையாக இருந்து மக்களுக்கு சேவை செய்ய காத்திருக்கிறேன் - அ.தி.மு.க.வேட்பாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேச்சு

உங்கள் வீட்டுப் பிள்ளையாக இருந்து மக்களுக்கு சேவை செய்ய காத்திருக்கிறேன் என அ.தி.மு.க.வேட்பாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசினார்.

Update: 2021-03-25 23:16 GMT
திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க.வேட்பாளராக போட்டியிடும் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் வி.வி. ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ.நேற்று காலையில் தனக்கன்குளம் சிவாங்கா அவென்யூ குடியிருப்பு நல சங்க நிர்வாகிகளை சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது அவர் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்யப்படும் என்று உறுதியளித்தார். இந்த நிகழ்ச்சியில் தனக்கன்குளம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கருத்தக்கண்ணன் மற்றும் குடியிருப்பு சங்க தலைவர் மகேந்திரன் உள்பட சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

இதனையடுத்து மாலையில் பசுமலை விநாயக நகரில் உள்ள விநாயகர் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு பிரச்சாரம் தொடங்கினார். அப்போது வேட்பாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ.விற்கு பெண்கள் மற்றும் பொது மக்கள் மலர் தூவி உற்சாக மான வரவேற்பு கொடுத்த னர். இதனையடுத்து பொது மக்கள் மத்தியில் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வாக்கு சேகரித்து பேசிய தாவது. மக்களின் மனம் அறிந்து மக்களுக்கான திட் டங்களை தந்து செயல்படக் கூடிய முதல்வராக எடப் பாடி பழனிச்சாமி இருந்தார் என்பது மக்களுக்கு நன்கு தெரியும். தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளில் ரூ.2,500 சொல்லாமலே வழங்கினார். 

அதே போல மாதம்தோறும் குடும்ப தலைவிக்கு ரூ.1500 வழங்கப்படும். 6 சிலிண்டர் இலவசம், கேபிள் டிவி அடுத்த மாதத்திலிருந்து இலவச இணைப்பு. விலை யில்லா வாசிங் மிஷின் உள்ளிட்ட தேர்தல் வாக்குறு தியை உறுதியாக நிறை வேற்றப்படும். தி.மு.க. வினருக்கு சொல்லத்தான் தெரியும் செயல்படுத்த மாட் டார்கள். உங்களில் ஒரு வனாக இருந்து உங்களுக்காக சேவை செய்ய காத்திருக் கிறேன் குடிமராமத்து திட்டத்தால் நீர்நிலைகள் நிறைந்து காணப்படுகிறது. அதிக சாலைகள் போடப் பட்டுள்ளது. விரிவாக்கப் பகுதியில் ஒரு சில சாலைகள் போடப்படவில்லை அதை மறுக்கவில்லை. 

தேர்தலில் வெற்றி பெற்றதும் மக்களின் கோரிக்கையை ஏற்று அதை நிறைவேற்றுவதற்காக முழுமூச்சாக செயல்படு வேன் உங்கள் வீட்டுப் பிள்ளையாக இருக்கிற எனக்கு மக்களாகிய நீங்கள் வாக்கு சேகரியுங்கள். என்னை வெற்றி பெறச் செய்யுங்கள் என்று உரிமையோடு கேட்டு கொள்கிறேன். தமிழகத்தில் மீண்டும் நல்லாட்சி முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தொடர வாக்களிக்க வேண்டிய சின்னம் இரட்டை இலை என்பதை மனதில் உறுதிபடுத்தி கொள்ளுங்கள். உங்களுக்காக உழைக்க காத்திருக்கிறேன். திருப்பரங் குன்றம் தொகுதியில் வளர்ச் சிக்காக அயராது பாடுபடுவேன். இவ்வாறு அவர் பேசினார். 

நிகழ்ச்சியில் மதுரை புறநகர் கிழக்கு எம்.ஜி.ஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், வேளாண் விற்பனைக்குழு முன்னாள் தலைவர் பூமிபாலன், மாவட்ட துணை செயலாளர் முத்துகுமார், வட்டச் செயலாளர் பொன் முருகன், முன்னாள் கவுன்சிலர் சீனி ராஜேந்திரன், பசுமலைசுந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்