முதியவரிடம் அரிவாளை காட்டி மிரட்டல்; வாலிபர் கைது
கடையம் அருகே முதியவரிடம் அரிவாளை காட்டி மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கடையம், மார்ச்:
கடையம் அருகே உள்ள கேளையாபிள்ளையூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 68). இவர் அந்த பகுதியில் உள்ள ரெயில்வே கேட் அருகே வந்தபோது அதே பகுதியை சேர்ந்த பிரதீப் (24) என்பவர் திடீரென அரிவாளை காட்டி அவரிடம் இருந்த ஆயிரம் ரூபாயை பிடுங்கி சென்று விட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் கடையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பீரதீப்பை கைது செய்தனர்.