பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

விக்கிரமசிங்கபுரத்தில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-03-25 21:29 GMT
நெல்லை, மார்ச்:
விக்கிரமசிங்கபுரம் செட்டிமேடு அகதிகள் முகாம் பகுதியை சேர்ந்தவர் அமல்ராஜ் என்ற ஆனந்த் (வயது36) என்பவர் மது அருந்திவிட்டு அடிக்கடி அதே பகுதியை சேர்ந்த பொதுமக்களை அவதூறாக பேசி வந்துள்ளார். மேலும் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை அவதூறாக பேசியுள்ளார். அந்த பெண், அமல்ராஜ் மனைவியிடம் சென்று உன் கணவரை கண்டித்து வைக்கும்படி கூறியுள்ளார். இதை மனதில் வைத்துக்கொண்டு நேற்று அந்த பெண் வீட்டின் முன் குடும்பத்துடன் நின்று பேசிக்கொண்டு இருக்கும் பொது அமல்ராஜ் அங்கு சென்று அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் போலீஸ் நிலையத்தில் அந்த பெண் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஆனந்தை கைது செய்தார்.

மேலும் செய்திகள்