தபால் வாக்குச்சீட்டுகளை பிரித்து அனுப்பும் பணி தீவிரம்

தபால் வாக்குச்சீட்டுகளை பிரித்து அனுப்பும் பணி தீவிரமாக நடந்து.

Update: 2021-03-25 21:13 GMT
திருச்சி, 

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தபால் வாக்குச்சீட்டுகளை பிரித்து அனுப்பும் பணி தீவிரமாக நடந்து.

3292 வாக்குச்சாவடிகள்

திருச்சி மாவட்டத்தில் திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர், மணப்பாறை, மண்ணச்சநல்லூர், லால்குடி, முசிறி, துறையூர் ஆகிய 9 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இந்த 9 சட்டமன்ற தொகுதிகளிலும் 23 லட்சத்து 32 ஆயிரத்து 886 வாக்காளர்கள் உள்ளனர்.

இவர்கள் வாக்களிப்பதற்காக மாவட்டம் முழுவதும் 3,292 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் ஒரு முதல்நிலை தேர்தல் அதிகாரி மற்றும் 3 அலுவலர்கள் பணியில் இருப்பார்கள்.

தபால் வாக்குகள்

இந்த வகையில் 9 சட்டமன்ற தொகுதிகளிலும் 15 ஆயிரத்து 800 அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வாக்குப்பதிவு தினத்தன்று பணியில் இருப்பார்கள். வாக்குப்பதிவு பணியில் உள்ள அதிகாரிகள் ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் உள்ள போலீசார் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் தபால் வாக்கு அளிக்க உள்ளனர். இதற்காக அவர்களுக்கு, வேட்பாளர் பெயர், சின்னங்களுடன் அச்சிடப்பட்ட தபால் வாக்குச்சீட்டுகள் வழங்கப்பட உள்ளன.

  அந்த தபால் வாக்குச்சீட்டு திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து உள்ளன. அவற்றை தொகுதி வாரியாக பிரித்து அனுப்பும் பணி திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. இன்று (வெள்ளிக்கிழமை) முதல் தபால் வாக்குகள் செலுத்தும்பணி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்