திருக்குறுங்குடியில் பஸ்சில் வந்த வியாபாரியிடம் ரூ.74 ஆயிரம் பறிமுதல்
திருக்குறுங்குடியில் பஸ்சில் வந்த வியாபாரியிடம் ரூ.74 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இட்டமொழி, மார்ச்:
திருக்குறுங்குடி டி.வி.எஸ். அரசு மேல்நிலைப்பள்ளி அருகே நேற்று மாலை களக்காடு யூனியன் ஆணையாளர் பிரமநாயகம், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆதிமூலம், ஏட்டு சுயம்பு ஆகியோர் அடங்கிய தேர்தல் பறக்கும் படையினர் ஏர்வாடி வழியாக பாபநாசம் சென்ற அரசு பஸ்சை நிறுத்தி திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது தூத்துக்குடியை சேர்ந்த பருப்பு வியாபாரி முனீஸ்வரன் என்பவர் வைத்திருந்த பையை சோதனையிட்டபோது அதில் ரொக்கப்பணம் 74 ஆயிரம் ரூபாய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரிடம் இருந்து பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து நாங்குநேரி தாலுகா அலுவலகத்தில் தலைமையிடத்து துணை தாசில்தார் சண்முகவேலுவிடம் ஒப்படைத்தனர்.