எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் எதிர்ப்பு கோஷமிட்ட வாலிபர் கைது

எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் எதிர்ப்பு கோஷமிட்ட வாலிபர் கைது

Update: 2021-03-25 20:43 GMT
உசிலம்பட்டி,மார்ச்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்து கொண்டிருந்தபோது டி.என்.டி. சான்றிதழில் உள்ள குளறுபடிகளை சரிசெய்ய வில்லை எனக் கூறி கண்டன வாசகங்கள் அடங்கிய பேனரை காண்பித்து முதல்-அமைச்சருக்கு எதிராக ஒரு வாலிபர் கோஷங்கள் எழுப்பினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே போலீசார் அந்த நபரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். விசாரணையில் அந்த நபர் உசிலம்பட்டி அருகே பொட்டல்பட்டியைச் சேர்ந்த லோகராஜ் (வயது 35) என்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்