கவுண்டம்பாளையம் தொகுதியில் அடிப்படை பிரச்சனைகளுக்கு முன்னுரிமை அளிப்பேன் திமுக வேட்பாளர் பையா கவுண்டர் வாக்குறுதி
கவுண்டம்பாளையம் தொகுதியில் அடிப்படை பிரச்சனைகளுக்கு முன்னுரிமை அளிப்பேன் என திமுக வேட்பாளர் பையா கவுண்டர் வாக்குறுதி அளித்தார்.
சரவணம்பட்டி,
தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தி.மு.க வேட்பாளர் பையா கவுண்டர் (எ) ஆர்.கிருஷ்ணன் நேற்று பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியத்துக்குட்பட்ட அசோகபுரம், குருடம்பாளையம் ஆகிய ஊராட்சிகளில் உள்ள காந்தி காலனி, ரங்கம்மாள் காலனி, ஸ்டேட்பேங்க் காலனி, டீச்சர்ஸ் காலனி, பழனிக்கவுண்டன்புதூர், வடமதுரை, தொப்பம்பட்டி, கதிர்நாயக்கன்பாளையம், நேருநகர், வெற்றிலைகாளிபாளையம் ஆகிய பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது, தி.மு.க ஆட்சி அமைந்து தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆனதும் எங்களது தேர்தல் அறிக்கையில் கூறியது போல மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்துவோம். கவுண்டம்பாளையம் தொகுதியில் குடிநீர், தார்சாலை, பொது சுகாதாரம், கழிவுநீர் கால்வாய்கள் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கு முன்னுரிமை அளிப்பேன்.
தலைவர் கூறியது போல் 100 நாட்களில் உங்களது குறைகள் அனைத்திற்கும் தீர்வு காண்பேன் என வாக்குறுதி அளித்தார்.
இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் கவுண்டம்பாளையம் தொகுதி பொறுப்பாளர் பி.வி.மணி, கொ.ம.தே.க மாவட்ட செயலாளர் குழந்தைவேலு, ம.தி.மு.க தொகுதி பொறுப்பாளர் தங்கவேலு, தி.மு.க மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் அசோக், செந்தில்ராஜா, குருடம்பாளையம் சரவணன், ஆறுச்சாமி, வேலுச்சாமி, பழனிச்சாமி, ஒன்றிய பொறுப்பாளர் கார்த்திக், ஒன்றிய கவுன்சிலர் கலா சாந்தாராம், மாவட்ட அணி அமைப்பாளர்கள் விஜயகுமார், ரங்கநாயகி, ரமேஷ் மற்றும் அரசூர் பூபதி, சிங்கை ரவிச்சந்திரன், சஹா விக்னேஷ், ம.தி.மு.க விஷ்வராஜ், முத்துசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ராகவன், தம்பி, வினோத் உள்ளிட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.