கார் மோதியதில் மோட்டார்சைக்கிளில் சென்ற வாலிபர் பலி
கார் மோதியதில் மோட்டார்சைக்கிளில் சென்ற வாலிபர் பலி
உசிலம்பட்டி,மார்ச்.
உசிலம்பட்டி அருகே உள்ள போலிப்பட்டியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 28). இவருக்கு திருமணமாகி மகனும், மகளும் உள்ளனர். இந்த நலையில் சதீஷ்குமாரின் மனைவி தற்போது 4 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதனிடையே சதீஷ்குமார் ஒரு மோட்டார் சைக்கிளில் உசிலம்பட்டி - திருமங்கலம் சாலையில் சென்று கொண்டிருந்தார். செம்பட்டி அருகே சென்ற போது அந்த வழியாக வந்த கேரள மாநிலத்தை சேர்ந்த கார் ஒன்று அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சதீஷ்குமாரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். இதனை தொடர்ந்து அவரது உடல் சொந்த ஊரான போலிபட்டிக்கு கொண்டு வரப்பட்டது.
விபத்தில் பலியான சதீஷ்குமார் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க கோரி மதுரை-தேனி சாலையில் உள்ள பொட்டலுபட்டி விலக்கு அருகே கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.