வங்கியில் கொள்ளை முயற்சி

வங்கியில் கொள்ளை முயற்சி

Update: 2021-03-25 20:24 GMT
திருப்பரங்குன்றம்,மார்ச்
திருப்பரங்குன்றம் அருகே நிலையூர் ஓம்சக்தி நகர் ராமானுஜம் நகரில் உள்ள வங்கி ஒன்றில் நேற்று முன்தினம் பணி முடிந்து ஊழியர்கள் வங்கியை பூட்டிவிட்டுச் சென்றனர். இந்த நிலையில் மர்ம கும்பல் வங்கியின் பூட்டை உடைத்துள்ளனர். 
அப்போது அந்த வழியாக தேர்தல் பறக்கும் படையினர் சென்றதாக கூறப்படுகிறது. மேலும் அந்த பகுதியில் கேமரா இருப்பதையும் கண்ட அந்த கும்பல் அவசரத்தில் தாங்கள் கொண்டு வந்திருந்த ஆயுதங்களை அங்குள்ள முட்புதரில் வீசி எறிந்து விட்டு தப்பிச் சென்று விட்டனர். 
இதனால் பல லட்சம் மதிப்புள்ள நகை, பணம் தப்பியது. தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்து மர்ம கும்பல் விட்டுச் சென்ற ஆயுதங்களை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 
குடியிருப்புகள் அதிகம் உள்ள வங்கியில் நடந்த இந்த கொள்ளை முயற்சி சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்