மின்சாரம் தாக்கி விவசாயி பலி
மின்சாரம் தாக்கி விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
மானாமதுரை,
மானாமதுரை அருகே மேல நெட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். விவசாயம் செய்து வந்தார். இந்தநிலையில் கூலி வேலைக்கு வாழை இழை அறுக்க சென்ற இடத்தில் தாழ்வாக சென்ற மின் கம்பி உரசியதில் மின்சாரம் தாக்கி ஆறுமுகம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இறந்தவரின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இந்த பகுதியில் இதுபோன்று அடிக்கடி சம்பவம் நடப்பதால் மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.