கோவை மாநகர புதிய போலீஸ் கமிஷனராக டேவிட்சன் தேவாசீர்வாதம் பதவி ஏற்பு

கோவை மாநகர புதிய போலீஸ் கமிஷனராக டேவிட்சன் தேவாசீர்வாதம் நேற்று பதவி ஏற்றுக்கொண்டார்.

Update: 2021-03-25 18:22 GMT
கோவை,

கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணி, மாநகர போலீஸ் கமிஷனர் சுமித்சரண் ஆகியோர் மீது தேர்தல் ஆணையத்துக்கு பல்வேறு புகார்கள் சென்றன. 

அதன் அடிப்படையில் அவர்கள் அதிரடியாக மாற்றப்பட்டனர். இதையடுத்து கோவை கலெக்டராக எஸ்.நாகராஜன், போலீஸ் கமிஷனராக டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர். 

பொறுப்பேற்பு

இந்த நிலையில் புதிய போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் நேற்று மாலை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். 

அவருக்கு போலீஸ் அதிகாரிகள், அலுவலக ஊழியர்கள் மற்றும் போலீசார் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர். 

அத்துடன் கோவை மாவட்ட கலெக்டர் எஸ்.நாகராஜனை சந்தித்து வாழ்த்து பெற்றார். புதிய போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் கடைசியாக சென்னை மாநகர காவல் தொழில்நுட்ப சேவை பிரிவின் கூடுதல் டி.ஜி.பி.யாக பதவி வகித்து வந்தார். 

கூடுதல் டி.ஜி.பி. தகுதி 

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பதவி ஐ.ஜி. தகுதி ஆகும். ஆனால் கூடுதல் டி.ஜி.பி. தகுதியில் இருக்கும் ஒருவர் கோவை மாநகர போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்றுக்கொள்வது இது முதல் முறை ஆகும். 

இதற்கு முன்பு கோவை மாநகரில் இருந்த போலீஸ் கமிஷனர்கள் அனைவரும் ஐ.ஜி. கிரேடில்தான் கமிஷனராக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.
 மேலும் டேவிட்சன் தேவாசீர்வாதம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மேற்கு மண்டல ஐ.ஜி.யாகவும் பதவி வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்