கட்சிக்கொடி கட்டுவதில் தகராறு
திருஉத்தரகோசமங்கை பகுதியில் கட்சிக்கொடி கட்டுவதில் தகராறு ஏற்பட்டது
ராமநாதபுரம்,
திருஉத்தரகோசமங்கை பகுதியில் தேர்தல் பிரசாரத்திற்கு வேட்பாளர்களை வரவேற்க கட்சி கொடி கட்டுவது தொடர்பாக அ.ம.மு.க. மற்றும் பா.ஜ.க. உறுப்பினர் இடையே திடீரென்று தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் நல்லிருக்கை பகுதியை சேர்ந்த அ.ம.மு.க. உறுப்பினர் கர்ணன் (வயது49) என்பவர் பா.ஜ.க.வை சேர்ந்த நல்லிருக்கை முத்துக்குமார் (42) என்பவரை செல் போனால் தாக்கியதில் தலையில் படுகாயம் அடைந்தார். இந்த கைகலப்பில் கர்ணனும் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இருவரும் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத் திரியில் அனுமதிக்க பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக முத்துக்குமார் அளித்த புகாரின் பேரில் உத்தரகோசமங்கை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.