சமூக இடைவெளி, முகக்கவசம் கட்டாயம்
பொது இடங்களில் சமூக இடைவெளி, முகக்கவசம் கட்டாயம் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கமுதி,
கமுதி கோட்டைமேட்டில் வட்டார வளர்ச்சி அலுவலர் அப்துல் ஜாபர் தலைமையில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சத்தியேந்திரன், நாராயணபுரம் ஊராட்சி மன்ற தலைவர் வேல்மயில் முருகன், செங்கப்படை ஊராட்சி மன்ற தலைவர் ராமு ஆகியோர் முன்னி லையில் பொதுமக்கள், வியாபாரிகளுக்கு கொரோனா விழிப்புணர்வு எச்சரிக்கை செய்யப்பட்டது. பொது இடங்களில் முக கவசம் அணியாத நபர்களை கண்டறிந்து கடைகள், வணிக வளாகங்களில் சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களுக்கு தலா ரூ.200, கடை உரிமையாளர் களுக்கு ரூ.500 முதல் அதிகபட்ச அபராதம் விதிக்கப்படும் என விழிப்புணர்வு ஏற்படுத்தி எச்சரித்தனர். நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி துறை அதிகாரிகள் ஊராட்சி செயலாளர் வேல்முருகன், செல்வபாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.