தெற்கு உடைபிறப்பு கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நாளைமறுநாள் நடக்கிறது
தெற்கு உடைபிறப்பு கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நாளைமறுநாள் நடக்கிறது.
உடன்குடி:
உடன்குடி அருகே உள்ள தெற்கு உடை பிறப்பு ராமலிங்க அய்யன் திருக்கோவில் பங்குனி உத்திர திருவிழா நாளைமறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. அன்று அதிகாலை 5 மணிக்கு குலசேகரன்பட்டினம் சிதம்பரேஸ்வரர் கோவில் கடற்கரையில் இருந்து கடல் தீர்த்தம் எடுத்து வருகின்றனர். காலை 9 மணிக்கு சிறப்பு கும்பாபிஷேகம், காலை 10 மணிக்கு அலங்கார தீபாராதனை, தொடர்ந்து வில்லிசை, மதியம் 11 மணிக்கு கணியான் குழுவினரின் நடனம், நண்பகல் 12 மணிக்கு சிறப்பு பூஜை, இரவு 7 மணிக்கு சிறப்பு பூஜை, தொடர்ந்து வில்லிசை, இரவு 9 மணிக்கு கணியான் குழுவினரின் நடனம், நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடைபெறுகிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.