மின்சாரம் தாக்கி லாரி டிரைவர் சாவு

மின்சாரம் தாக்கி லாரி டிரைவர் சாவு

Update: 2021-03-25 01:51 GMT
சாவு
காரமடை

காரமடை அருகே வேளாங்கண்ணி வி.ஐ.பி.நகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 60). லாரி டிரைவர். 

இவர் நேற்று காரமடை அருகே திம்மம்பாளையத்தில் உள்ள நிறுவனத்தில் இருந்து பேப்பர் அட்டைகளை  கன்டெய்னர் லாரியில் ஏற்றிக்கொண்டு  தேக்கம்பட்டியில் உள்ள ஒரு  தனியார் நிறுவனத்தில் கொண்டு இறக்கினார். 

பின்னர் கன்டெய்னர் லாரியின் கதவை மூடும்போது அருகில் இருந்த மின்சார கம்பி லாரியின் கதவில் பட்டுள்ளது.  இதை கவனிக்காத கோவிந்தராஜ் லாரியின் கதவை மூடும்போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 
 இதுகுறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்