அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுப்பேன்; அ.தி.மு.க.வேட்பாளர் மாணிக்கம் பேச்சு

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலூகா சோழவந்தான் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மாணிக்கம் கொளுத்தும் வெயிலில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

Update: 2021-03-25 00:30 GMT
நேற்று அலங்காநல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட நகரியில் தொடங்கி அய்யங்கோட்டை, தனிச்சியம், கொண்டயம்பட்டி, மேலசின்னன்ம்பட்டி, கள்வேலிபட்டி, சின்னஇலந்தைகுளம், புதுப்பட்டி உள்ளிட்ட 34 கிராமங்களில் வாக்கு சேகரித்தார். அவருக்கு கிராமங்கள் தோறும் பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். ரோஜாவை ஒரு சிறுமி கொடுத்து வரவேற்றது அனைவரையும் கவர்ந்தது. அப்போது திறந்த ஜுப்பில் நின்றபடி வேட்பாளர் மாணிக்கம் பேசினார். 

அப்போது அவர் கூறியதாவது. தமிழர்குலசாமி ஜெயலலிதாவின் தொலைநோக்கு சிந்தனையில் ஏராளமான நலத்திட்டங்களை அவருக்குப்பின் 
தொடர்ந்து செயல்படுத்திவந்திருக்கின்றோம்.காலசூழ்நிலைக்கு ஏற்றபடி மக்களின் தேவை அறிந்து அவர்களின் வாழ்வாதாரம் உயரும்படி அவரது வழியில் வந்த முதல்வரும், துணைமுதல்வரும் உலகமே வியக்கும் அளவில் ஆட்சிசெய்து வருகின்றனர். தமிழர்களின் பாராம்பரிம் காக்கப்பட உலகமுழுவதும் ஜல்லிகட்டுக்கு போராடியபோது அந்த ஜல்லிக்கட்டு பிரச்சனையில் தடையை நீக்கி நிரந்தரஅனுமதியை பெற்றுத்தந்து எல்லோர் 
மனதிலும் அழியாத கல்வெட்டாய் இடம்பிடித்துவிட்டது ஜெயலலிதா அரசு.இந்த பகுதியில் விவசாயம் செழிக்க முல்லைபெரியாறு தண்ணீரினை சாத்தையாறு அணையுடன் இணைத்திடவும், தேர்தல் வாக்குறுதியில் கூறியுள்ளதுபோல் முதியோர் உதவிதொகை ரூ.2ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு அவர் பேசினார். 

உடன் ஒன்றியசெயலாளர் ரவிச்சந்திரன், முன்னாள் யூனியன் சேர்மன் ராம்குமார், கூட்டுறவு சங்க தலைவர் பாலாஜி, சிங்கராஜ் மாவட்ட இளைஞர் பாசறை இணைசெயலாளர் உமேஷ்சந்தர், ஒன்றிய பாசறை செயலாளர் மதன் கட்சி நிர்வாகிகள் மாணிக்கம், நடராஜன், தாமரை, சுந்தரராகவன், பாரி மற்றும் ஊராட்சிமன்ற தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், வார்டுசெயலாளர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்