விவசாய குடும்பத்தில் பிறந்த விவசாயி ஒருவர் நமக்கு முதல்- அமைச்சராக வரவேண்டும்- தேர்தல் பிரசாரத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேச்சு

விவசாய குடும்பத்தில் பிறந்த விவசாயி ஒருவர் நமக்கு முதல்- அமைச்சராக வரவேண்டும் என அம்மாபேட்டையில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கூறினார்.

Update: 2021-03-24 23:43 GMT
அம்மாபேட்டை
விவசாய குடும்பத்தில் பிறந்த விவசாயி ஒருவர் நமக்கு முதல்- அமைச்சராக வரவேண்டும் என அம்மாபேட்டையில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கூறினார். 
தேர்தல் பிரசாரம்
ஈரோடு மாவட்டம் பவானி சட்டமன்ற அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் கே.சி.கருப்பணன் மற்றும் அந்தியூர் சட்டமன்ற தொகுதி  அ.தி.மு.க. வேட்பாளர் சண்முகவேல் ஆகியோரை ஆதரித்து பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி.  அம்மாபேட்டையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசும்போது கூறியதாவது:-
இந்த தேர்தல் விவசாயியான எடப்பாடி பழனிசாமிக்கும், அரசியல் வியாபாரியான தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கும் இடையே நடக்கும் தேர்தல். எனவே இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றால் நமக்கு மீண்டும் ஒரு விவசாயி முதல்- அமைச்சராக வருவார். டாக்டர் ராமதாசின் 40 ஆண்டுகால கோரிக்கையை ஏற்று வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியவர் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. இதேபோல் அனைத்து சாதியினருக்கும் இட ஒதுக்கீட்டை பெற்று தந்து சமூக நீதி வழங்கப்படும். 
விவசாய குடும்பத்தில்...
நாங்கள் மக்களை நம்பி உள்ளோம். மக்கள் கூட்டணிதான் அ.தி.மு.க.வை வெற்றி பெறச்செய்யும். நாம் அனைவரும் விவசாயி. விவசாய குடும்பத்தில் பிறந்த விவசாயி ஒருவர் நமக்கு முதல்- அமைச்சராக வரவேண்டும். அதற்காக அனைவரும் அயராது பாடுபட்டு அ.தி.மு.க.வை ஆட்சியில் அமர்த்த வேண்டும.
இவ்வாறு அவர் பேசினார். 
தேர்தல் பிரசாரத்தில் மாநில பா.ம.க. துணை பொதுச்செயலாளர் எஸ்.சி.ஆர்.கோபால், வடக்கு மாவட்ட செயலாளர் மனோகரன் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள், பா.ம.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்