வெறிநாய் கடித்து குதறியதில் சிறுமி உள்பட 10 பேர் காயம்

திருப்பூர் வீரபாண்டி பகுதிக்கு உட்பட்ட பலவஞ்சிபாளையம் பகுதியில் சாலையில் சுற்றித்திரிந்த வெறிநாய் கடித்து குதறியதில் சிறுமி உள்பட 10 பேர் காயம் அடைந்தனர். அந்த நாயை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்துச்சென்றனர்

Update: 2021-03-24 23:32 GMT
வீரபாண்டி
திருப்பூர் வீரபாண்டி பகுதிக்கு உட்பட்ட பலவஞ்சிபாளையம் பகுதியில் சாலையில் சுற்றித்திரிந்த வெறிநாய் கடித்து குதறியதில் சிறுமி உள்பட 10 பேர் காயம் அடைந்தனர். அந்த நாயை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்துச்சென்றனர்
இது பற்றிய விவரம் வருமாறு
10 பேரை கடித்து குதறியது
திருப்பூர் பலவஞ்சிபாளையம் ஜெ.ஜெ.நகர் பகுதியில் நேற்று மதியம் டீக்கடை அருகில் ஒரு சிறுமி விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது அங்கு வந்த ஒரு நாய் திடீரென்று சிறுமியை கடித்தது. மேலும் அதனை  பார்த்து தடுக்க வந்த ஒரு ஆட்டோ டிரைவரின் காலையும் அந்த நாய் கடித்து குதறியது.
உடனே அருகில் இருப்பவர்கள் சிறுமி மற்றும் ஆட்டோ டிரைவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். மேலும் அங்கிருந்து தப்பிச் சென்ற நாய் அப்பகுதியில் சுற்றித்திரிந்ததுடன் மேலும் சிலரையும் கடித்து குதறியது. இதன் காரணமாக மொத்தம் 10 பேரை கடித்து விட்டுச் சென்றதாக தெரிகிறது.
பிடித்து சென்றனர்
 உடனே இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாநகராட்சி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி ஊழியர்கள் அந்த வெறி நாயை தேடும் பணியில் ஈடுபட்டனர். 
பின்பு மாலையில் வெறிநாய் மற்றும் அதனுடன் சுற்றித்திரிந்த மூன்று தெரு நாய்களை பிடித்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் காலை முதல் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்