சிவகாசி அ.தி.மு.க. வேட்பாளர் லட்சுமிகணேசனுக்கு, நாடார் மகாஜனசங்க பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ் வாழ்த்து

சிவகாசி சட்டமன்ற தொகுதி யில் அ.தி.மு.க. சார்பில் போட்டி யிடும் வெற்றி வேட்பாளர் லட்சுமி கணேசன் கடந்தசில நாட்களாக தொகுதி முழுவதும் பல்வேறுபகுதியில் சூறாவளிபிரசாரம் செய்து வருகிறார்.

Update: 2021-03-24 23:00 GMT
குறிப்பாக சமுதாய தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொழிலதிபர்கள், தொழிலா ளர்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். இந்தநிலையில் விருதுநகரில் வசித்து வரும் நாடார் மகாஜனசங்க பொதுச் செயலாளர் கரிக்கோல்ராஜை, அ.தி.மு.க. வேட்பாளர் லட்சுமி கணேசன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது அவருடன்கனகு,மாவட்ட கூட்டுறவு வங்கிதலைவர் சிவகாசி ஆரோக்கியம், ஜெயல லிதா பேரவைஒன்றிய செயலா ளர் கண்ணன், ஆண்டவர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து நாரணாபுரம் பகுதியில் உள்ள முக்கிய பிரமு கர்கள், சமுதாயத்தலைவர், அ.தி.மு.க. நிர்வாகிகள், கூட்டணி கட்சிநிர்வாகிகளை சந்தித்தசிவகாசி தொகுதி அ.தி.மு.க. வெற்றி வேட்பாளர் லட்சுமிகணேசன் ஆதரவு திரட்டினார். 

நாராணபுரம் ஊராட்சி மன்றதலைவர் டி.கே.ஆர்.தேவராஜனை நேரில் சந்தித்து, லட்சுமி கணேசன் ஆதரவு திரட்டினார்.பின்னர் நாரணாபுரம், லட்சுமி யாபுரம், புதூர் ஆகியபகுதியில் உள்ள கட்சிபிரமுர்கள்மற்றும் முக்கியபிரமுகர்கள், கூட்டணிகட்சிநிர்வாகிகளை சந்தித்தலட்சுமி கணேசன் அவர்களிடம் ஆதரவு கேட்டார். நாராணபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட போஸ் காலனி, பர்மா காலனி, 
முத்து ராமலிங்கபுரம் காலனி ஆகிய பகுதியில் வீடு, வீடாக சென்று இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார். பின்ன சிவகாசி கிழக்கு ஒன்றியத்துக்கு உட் பட்ட எம்.ஜி.ஆர்.காலனியில் பிரச்சாரம் செய்தார். நேரு காலனிக்கு வந்த அ.தி.மு.க. வேட்பாளர் லட்சுமி கணே சனுக்கு முன்னாள் ஒன்றியத் துணைத்தலைவர் சுடர்வள்ளி சசிக்குமார் தலைமையிலான மகளிர் அணியில்ரோஜாப் பூக்களை தூவி வரவேற்றனர். பின்னர்அங்கிருந்து விவேகா னந்தர் காலனி, பத்திரகாளி யம்மன் காலனி, முத்துராம லிங்கம் காலனி, இந்திராநகர், பள்ளப்பட்டி, லிங்கபுரம் காலனி, காமராஜர் காலனி ஆகிய 
இடங்களில் வீடு, வீடாக சென்றுஅ.தி.மு.க. வேட்பாளர் லட்சுமி கணேசன் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். அப்போது அப்பகுதி பெண்கள்உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பலர் ஆராத்தி எடுத்து திலகமிட்டு வரவேற்றனர். பின்னர் அ.தி.மு.க. வேட்பாளர் லட்சுமி கணேசன் முத்தமிழ்புரம், மீனாட்சிகாலனி, உசேன் காலனி, சாமிபுரம் காலனி, அம்மன்நகர், பர்மாகாலனி, போஸ்காலனி, இந்திராநகர் ஆகியஇடங்களில் பிரச்சாரம் செய்தார்.

முக்கியபிரமுகர்கள்
நேற்று காலை சிவகாசி பகுதியில் உள்ள முக்கிய தொழிலதிபர்களை அ.தி.மு.க. வேட்பாளர் லட்சுமிகணேசன் நேரில் சந்தித்து ஆசி பெற்று ஆதரவு திரட்டினார். அவர்கள் விபரம் வருமாறு:

காளீஸ்வரி குரூப்ஸ்மல்லிகா செல்வராஜன், விஜயமோகினி அண்ணாமலைச்சாமி, அய்யன் குரூப்ஸ்மதனாராமமூர்த்தி, அனில் குரூப்ஸ் பொன்னு லட்சுமி செண்பகமூர்த்தி, பக்கிய லட்சுமி சிவபிரான், பிரேமா பால்ராஜ், கீதாலேமி னேசன் கமலக்கண்ணன், விஜயா நர்சிங் ஹோம் டாக்டர் ராஜேஷ், சிவகாசிகம்மவர் சங்க செயலாளர் பொன்னுச் சாமிநாயக்கர் ஆகியோரை சந்தித்து அ.தி.மு.க. வெற்றி வேட்பாளர் லட்சுமி கணேசன் இரட்டை இலைக்கு வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டார்.

மேலும் செய்திகள்