சிவகாசி,
சிவகாசி சிறுகுளம் கண்மாய் பகுதியில் டவுன் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காமராஜர் ரோட்டை சேர்ந்த ஜாபர் சாதிக் (வயது 32) என்பவர் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்தார். அவரை போலீசார் அழைத்து விசாரித்தபோது அவர் 110 கிராம் கஞ்சாவை விற்பனைக்காக மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து ஜாபர் சாதிக்கை கைது செய்த போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.