இளம்பெண்ணை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
இளம்பெண்ணை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
சங்கராபுரம்,
சங்கராபுரம் அருகே சேஷசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் பாஸ்கர் (வயது 20). இவர் 18 வயதுடைய இளம்பெண்ணை கடத்தி சென்றார். இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்விநாயகம், சப்-இன்ஸ்பெக்டர் திருமால் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் பாஸ்கரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து இளம்பெண்ணை மீட்டனர்.