கைலாசநாதர் கோவிலில் குடமுழுக்கு

திருக்கடையூர் அருகே மாத்தூரில் கைலாசநாதர் கோவிலில் குடமுழுக்கு திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2021-03-24 19:01 GMT
திருக்கடையூர்:
திருக்கடையூர் அருகே மாத்தூரில் கைலாசநாதர் கோவிலில் குடமுழுக்கு திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
குடமுழுக்கு நடைபெற்றது
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அருகே மாத்தூர் கிராமத்தி்ல் உள்ள கைலாசநாதர் கோவிலில் குடமுழுக்கு நடைபெற்றது. முன்னதாக கடந்த 19-ந் தேதி கணபதி ஹோமம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து 3 நாட்கள் தினமும் பூஜைகள் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் நேற்று காலை யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. பின்பு யாகசாலையில் ஹோமங்களுக்கு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் புனிதநீர் கோவில் கோபுர விமானத்தில் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை மாத்தூர் கிராம மக்கள் செய்திருந்தனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து 48 நாட்கள் மண்டல அபிஷேகம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்